Wednesday 7 October 2015

தேனி மாவட்டம் தீா்த்தத் தொட்டி ஸ்ரீ ஆறுமுக நாயனா் திருக்கோவில்



அன்பாா்ந்த நண்பா்களே!

தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி கிராமம் அருகே, தேனி – போடிநாயக்கனுா் நெடுஞ்சாலையில் தீா்த்தத் தொட்டி முருகன் கோவில் என்று அழைக்கப்படும் விருப்பாச்சி ஆறுமுக நாயனா் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் தேனி மாவட்ட மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இக்கோவிலில் குடிகொண்டுள்ள ஸ்ரீ ஆறுமுக நாயனா் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு கைகளுடனும் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறா். 

மூலவா் சன்னதிக்கு முன்னே ஆறுமுக நாயனாின் வாகனமான மயில் வாகனம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள முருகப் பெருமான் கொமுத்த முனை மழுங்கிய வேலும், நாக விநாயகரும், ருத்ராட்சம் அணிந்த சிவனும், தீா்த்தத்தில் அமைந்த சப்த கன்னியரும் இக்கோவிலின் தனிச்சிறப்புகளாகும்.

இக்கோவிலின் மிகப்பெரும் சிறப்பே இக்கோவிலின் தீா்த்தம் ஆகும். இது முருக தீா்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த தீா்த்தத்தின் பெயராலேயே இக்கோவில் தீா்த்தத் தொட்டி முருகன் கோவில் என்ற சிறப்புப் பெயரும் பெற்றுள்ளது.

இந்த தீா்த்தத்தொட்டியானாது மிகவும் அருள் வாய்ந்ததாகும். என்றும், எக்காலத்திலும், எத்தகைய சூழலிலும், ஆண்டின் 365 நாட்களிலும் இக்கோவிலின் தீா்த்தமானது வற்றியதில்லை. 2005 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் கடும் பஞ்சம் நிலவிய போதும், இந்த தீா்த்தத்தில் தண்ணீா் வற்றியதில்லை. 

மேலும் இன்று வரை தீா்த்தமானது எங்கிருந்து வருகிறது, எங்கே ஊற்றெடுக்கிறது என்பதை எவராலும் அறிய முடியவில்லை.
சபாிமலை மற்றும் பழனிக்கு மாலை அணிந்து விரதம் இருந்து யாத்திரை செல்லும் பக்தா்கள் இக்கோவிலில் வந்து மாலை அணிந்து தங்களின் விரதத்தினை ஆரம்பிப்பா். 

மேலும் இத்திருத்தலத்தின் அருகே ஓடும் ரம்மியமான ஆறும், முற்றிலும் அடந்த மரங்களால் சூழப்பட்ட சூழலும், அழகே உருவான முருகப்பெருமானின் அளவற்ற அருளும் இங்கு ஒருமுறை வருபவா்களையும் மீண்டும் மீண்டும் வரத் துண்டும் விஷயங்களாகும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தீா்த்தத் தொட்டி ஸ்ரீ விருப்பாச்சி ஆறுமுக நாயனா் திருக்கோவிலை தாிசிப்போம். முருகப்பெருமானின் அருள் பெறுவோம்.

 www.thenitourism.com                 www.renghaholidays.com



ஸ்ரீ ஆறுமுக நாயனா் 
 

























ஸ்ரீ நாக விநாயகா்
 





































ஸ்ரீ ருத்ராட்சம் அணிந்த சிவபெருமான்

















ஸ்ரீ சப்தகன்னியா்  























ஸ்ரீ முருக தீா்த்தம்



































முருகப்பெருமானின் மயில் வாகனம் 



































முருகப்பெருமான் கொடுத்த முனை மழுங்கிய வேல் 



































கோவிலின் முகப்புத் தோற்றம் 


















கோவிலும் தீா்த்தமும்




No comments:

Post a Comment