Wednesday 7 October 2015

தமிழ் நாட்டில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் கொழுக்குமலை !!!

அன்பாா்ந்த நண்பா்களே!

தமிழ் நாட்டில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் கொழுக்குமலை !!!

அத்தகைய சிறப்பு வாய்ந்த சுற்றுலா பகுதிக்கு ரெங்கா ஹாலிடேஸ் ரெங்கா டிராவல்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் 100 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஜீப் மூலம் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது.

மேலும் விபரங்களுக்கு    

 www.renghaholidays.com              www.thenitourism.com

 

தமிழ் நாட்டில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் கொழுக்குமலை !!!

தேனி - போடி - போடிமெட்டு - கொழுக்குமலை பஸ் வசதி உண்டு. ஜீப்பிலும் போகலாம். போடிமெட்டில் தங்க நல்ல உணவு விடுதிகள் உண்டு

நம்ம ஊரில் இருந்து வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு இருப்பவர்கள் .நம்ம ஊருக்கு போன நல்ல ஒரு இடத்திற்கு போய் சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைபவர்கள் நிறைய நண்பர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த இடம் கண்டிப்பாக அந்த சந்தோசத்தை கொடுக்கும் .

உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. வருடம் முழுவதும் குளிந்தே இருக்கும் மலையும் இதுதான். இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு கொழுக்குமலை அமைந்திருப்பது தமிழகத்தில் என்பதே சிறப்புதான்! வாருங்கள். குளு குளு மலைக்குப் பயணிப்போம்.

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்சசி மலைக்குக் கீழ் அமைந்துள்ள பசுமையான மாவட்டம். தேனியிலிருந்து மேற்கு திசையில் பார்த்தால் உயர்ந்த மலைக் குன்றுகளை சுற்றிச் சுற்றி மேகங்கள் விளையாடியடி தெரிவதுதான் மேற்குச் தொடர்ச்சி மலை.

மலைகள் எப்போதும் ஆகாயத்துடன் பேசிக்கொண்டே இருக்கும் அவ்வளவு உயரம் மலைகளும் மேகங்களும் ஆகாயம் தொட்ட அழகிய இடம்தான் கொழுக்குமலை.

தேனி- போடி கடந்து மூணாறு சாலையில் பயணித்தால் பசுமையை ரசித்தபடி வளைந்து நெளிந்து செல்லும் போடி மெட்டுசாலை. இங்கேயே குளிர் நம்மை ஒட்டிக்கொள்ளும் பரவசம், இதமாக போடி மெட்டு கடந்து பசுமைப் பயணம் தொடர வருவது பூப்பாறை.

தேயிலை மலைத்தோட்டம் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே ரம்மியமான பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம்.

தேக்கடிபோல் தேயிலை மலைகளின் காலடியில் வளைந்து வளைந்து செல்லும் நீண்ட நீர்த்தேக்க டேம். பார்த்து ரசித்து பரவசமடையும் ரம்மியமாக அமைந்துள்ளது.

அடுத்து சூடு பார்க்காத மலை நகரம் சூரியநெல்லி, கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயில்தான் சூரியநெல்லி.

இங்கிருந்து கொழுக்கு மலைக்கு ஜீப்பில்தான் செல்லமுடியும். அவ்வளவு உயரமான மலைச்சாலை. சுற்றியுள்ள சில மலை கிராமங்களுக்கு இன்றைக்கும் குதிரை சுமையாகத்தான் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

கொழுக்குமலைக்குச் செல்வதற்கு முன் கண்ணுக்கு எட்டிய தூரம் தேயிலைத் தோட்டங்கள்தான். அந்த பசுமையோடு குளிர்ந்த மேகக் கூட்டம் நம்மோடு கொஞ்சி விளையாடிக் கொண்டே வரும்.

அதோடு சாரல் மழையும் நம்மோடு சங்கம்மாகும். அழகான மலையும் சாரல் குளிர்க்காற்றும் நம்மை குஷிப்படுத்தும் உணர்வே தனி சுகம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் அமைந்த பசுமையான மலைதான் கொழுக்கு மலை.

இந்த மாலையில் விளையும் தேயிலை உலக அளவில் ஃபேமஸ். ஆர்கானிக் இயற்கை முறைப்படி தயாராகும் இந்த தேயிலை உற்பத்தியை சுற்றுலாப் பயணிகள் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கலாம்.

வருடம் முழுவதும் குளிரும் தமிழகத்தின் தலைசிறந்த இடமான இங்கிருந்து போடி, குரங்கணி, தேனி மாவட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளையும், கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் என பசுமையான பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம்.


















No comments:

Post a Comment