Wednesday, 8 February 2017
Wednesday, 5 October 2016
Hi friends, Good evening to everybody.
We are doing all the western gatz packages at best level at renghaholidays now we had lunched a new website as www.besttourpackages.in

Friday, 30 September 2016
சகல நன்மைகளும் தரும் மஹாலட்சுமி தலங்கள்
நவராத்திரி ஆரம்பம் - 01.10.2016
திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தில் மகாலட்சுமி தனி சந்நதியில் அருளாட்சி புரிகிறாள். அவள் சந்நதிக்கெதிரே உள்ள லட்சுமி தீர்த்தத்திலிருந்தே ஆலய வழிபாடுகளுக்கு நீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
* ராமேஸ்வரம் ஆலய பிராகாரத்தில் மகாலட்சுமி கொலுவிருக்கக் காணலாம். அவள் திருமுன் சிவலிங்கம் இடம்பெற்றுள்ளது. ராமபிரானின் பிரம்மஹத்தி தோஷம் போக்கிய ஈசனை திருமகள் வணங்கும் அபூர்வத் திருக்கோலம் இது.
* மும்பை - போரிவிலியை அடுத்த வசை எனும் இடத்தில் ஹேதவடே கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் திறக்கப்படும் மகாலட்சுமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரு பாறையே திருமகளாக வழிபடப்படுகிறது.
* பத்ரிநாத்தில் மகாலட்சுமிக்கு தனிக்கோயில் உள்ளது. சாளக்கிராம கற்கள் வடிவில் தேவி இங்கு அருள்கிறாள்.
* செங்கல்பட்டு படாளம் அருகே உள்ள அரசர் கோயிலில் ஆறு விரல்களைக் கொண்டு சுந்தரமகாலட்சுமி எனும் திருநாமத்தோடு திருமகள் அருளாட்சி புரிகிறாள்.
* ஆந்திர மாநிலத்திலுள்ள மங்களகிரி நரசிம்மர் ஆலயத்தில் மலையின் மேல் சாந்த நிலையில் ஆபரணங்கள் ஏதுமின்றி தவம் செய்யும் நிலையில் மகாலட்சுமியை தரிசிக்கலாம்.
* சென்னை - பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமிகளோடு ஆதிமகாலட்சுமியையும் நாராயணரையும் வணங்கி மகிழலாம்.
* நாச்சியார் கோயிலில் வஞ்சுளவல்லி எனும் பெயரில் மகாலட்சுமி அருள்கிறாள். இங்கு முதல் வழிபாடு அனைத்தும் தாயாருக்கே நடைபெறுகிறது.
* சென்னை - பூந்தமல்லிக்கு அருகே உள்ள போரூர் மதனானந்தபுரத்தில் உள்ள முப்பெருந்தேவியர் ஆலயத்தில் பிரதான கருவறையில் மும்பை மகாலட்சுமியை தரிசிக்கலாம்.
* காஞ்சிபுரம் காமாட்சி ஆலய கருவறையின் கோஷ்டங்களில் அரூபலட்சுமி, சௌந்தர்யலட்சுமி இருவரும் அருளாட்சி புரிகின்றனர்.
* பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் எனும் இடத்தில் மகாலட்சுமிக்கென்றே ஒரு தனிக்கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
* மும்பையில் மலபார் குன்றின் அடிவாரத்தில் ப்ரீச் காண்டி எனுமிடத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி- துர்க்கையோடு அருள்கிறாள். மும்பை நகரின் செல்வச் செழிப்பிற்கு இந்த மகாலட்சுமியே காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை.
* மயிலாடுதுறை - கும்பகோணம் பாதையில் குத்தாலத்திற்கு அருகே திருநின்றியூர் என்கிற தலம் உள்ளது. இங்கு மகாலட்சுமி ஈசனை பூஜித்ததால் லட்சுமிபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
* புதுக்கோட்டை புவனேஸ்வரி ஆலயத்தில் அஷ்டதசபுஜ மகாலட்சுமி எனும் பெயரில் தேவி மகாத்மியம் வர்ணனைப்படி துலங்கும் மகாலட்சுமியை தரிசிக்கலாம்.
* திருப்பதி - திருச்சானூரில் அன்னை மகாலட்சுமியே அலர்மேலுமங்கைத் தாயாராக அருள்கிறாள்.
* திருப்பத்தூர் திருத்தளி தலத்தில் ஈசனின் தாண்டவ திருக்கோலத்தைக் காண தவம் புரியும் நிலையில் திருமகளை தரிசிக்கலாம். திருமகளுக்காக ஈசன் ஆடிய லட்சுமி தாண்டவத்தையும் அங்கு நாம் தரிசிக்கலாம்.
* சென்னை - மயிலை மாதவப்பெருமாள் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் வில்வார்ச்சனை நடைபெறும் மகாலட்சுமி தேவியை மயூரவல்லித்தாயார் எனும் பெயரில் தரிசிக்கலாம்.
* ஹைதராபாத்தில் யாதகிரிகுட்டாவில் மகாலட்சுமி தேவி நரசிம்மமூர்த்தியோடு அருளாட்சி புரிகிறாள்.
* ஆதிசங்கரருக்கு தங்க நெல்லிக்கனிகளாக பொழியச் செய்த மகாலட்சுமி பிரசன்னமான வீடு இன்றும் கேரளாவில் ‘ஸ்வர்ணத்து மனை’ எனும் வீடாக பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது.
* திருமகள், கோவிந்தனோடு ஐக்கியமாக, பெருமாள் திரிபங்கநிலையில் காட்சி தரும் தலம் சிங்கப்பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள ஆப்பூரில் உள்ளது. மூலிகைகள் நிறைந்த மலை மீது உள்ளது இக்கோயில். இத்தலத்தில் பெருமாளுக்கு பட்டுப்புடவையே சாத்தப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

Subscribe to:
Posts (Atom)